பிரிட்டனில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபுபட்ட வடிவம், பிரான்ஸில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த நபர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும், டிசம்பர் 19ஆம் திகதி அவர் லண்டனிலிருந்து பிரான்ஸ் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.