கொரோனா பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு (Zhang Zhao) நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
ஜாங் ஜான், (Zhang Zhao) ஷாங்காய் நீதிமன்றில் ஒரு குறுகிய விசாரணையின் பின்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு (Ren Guanyu) செய்தியாளர்களிடம் கூறினார். ஜாங் ஜான், (Zhang Zhao) கொரோனா குறித்து குழப்பமான ஆரம்ப கட்டங்களில் அறிக்கை செய்ததற்காக மோதல்கள் மற்றும் சிக்கலைத் தூண்டுவதற்கும் வழியமைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்காககே இந் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.