புதிய வகை கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்த ஒட்டோவாவைச் சேர்ந்த மூன்றாவது நபரும் கண்டறியப்பட்டள்ளதாக பொதுச்சுகாதார அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரை உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதோடு அவசியமான மருத்துவ கண்காணிப்புக்களையும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து அண்மையில் இவர் கனடா திரும்பியிருந்த நிலையிலேயே புதிய வகை கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த நபருடன் கனடாவில் இதுவரையில் நால்வர் புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.