விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இமாசல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற விழாவில் ஒன்றில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது புதிதாக இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி அவர்களை தவறாக வழிநடத்துகிறது. விவசாயிகளை தவறாக வழிநடத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது.
எப்போதெல்லாம் ஒரு சீர்திருத்தம் வருகிறதோ அப்போதெல்லாம் அது நேர்மறையான முடிவுகளை காட்டத்தொடங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.
1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களை அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கொண்டுவந்தபோதாகட்டும், வாஜ்பாய் அரசு கொண்டு வந்தபோதாகட்டும் அவை பலன் அளிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆனது எனத் தெரிவித்துள்ளார்.