நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ‘அஸ்ட்ரா செனகா’ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள, கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த மாதம் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்பாக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், தலா,இரண்டு மாவட்டங்களில் நேற்றும் இன்றும் சோதனை ஒத்திகை இடம்பெற்றது
தடுப்பூசி வழங்கும் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள, ‘கோ வின்’ என்ற, அழைபேசி செயலியில், பயனாளர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் தொடங்கி, தடுப்பு மருந்து வைக்கப்படும் குளிர்பதன கிடங்கு பரிசோதனை, அங்கிருந்து, தடுப்பூசி மையத்திற்கு மருந்துகளை எடுத்து செல்வது உள்ளிட்ட நடைமுறைகள், குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.