பிரித்தானிய விமானங்கள் இந்தியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் நீடிக்கப்படும் என்று, இந்தியாவின் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்துக்கு இந்திய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
“இந்த தடை வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் நீடிக்கப்படலாம். இது தற்காலிகமான தடை தான். நீண்ட காலத்திற்கோ அல்லது காலவரையின்றியோ நீடிக்காது.” என்றும், அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.