இந்தியாவில், எதிர்வரும், ஜனவரி 31 ஆம் நாள் வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், மற்றும் சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், கட்டுப்பாடு, கண்காணிப்பு, எச்சரிக்கை அவசியம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.





