பிரித்தானியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 414 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
“இங்கிலாந்தில் முன்பில்லாதவாறு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், குறிப்பாக வைத்தியசாலைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் இது மிகவும் கவலையாக உள்ளது” என இங்கிலாந்தின் பொது சுகாதார மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சூசன் ஹோப்கின்ஸ் (Susan Hopkins) தெரிவித்துள்ளார்.