சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாக அரச கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.
அதன்படி டமாஸ்கஸ் கிராமப்புறங்களில் உள்ள நபி ஹபீல் அமைந்துள்ள சிரிய வான் பாதுகாப்புப் பிரிவை இலக்காகக் இஸ்ரேல், இன்று அதிகாலை வடக்கு கலிலி பகுதியிலிருந்து ரொக்கெட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
சிரிய வான் பாதுகாப்பு தலைமையகம் மற்றும் டமாஸ்காஸின் கிராமப்புறங்களில் ஈரானிய போராளிகளின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்ததாக போர் கண்காணிப்பாளரான சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகமும் சுட்டிக்காட்டியுள்ளது.