பிரெக்சிற்றுக்குப் பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
இந்த வரைபு கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எட்டப்பட்ட புதிய உறவுக்கான ஒப்பந்தத்தை சட்டமாகக் கொண்டுவருகிறது.
முன்னதாக பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான பிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களான உர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் சார்ளஸ் மைக்கேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கையெழுத்திடுவதற்காக ஒப்பந்த ஆவணங்கள் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.