அமெரிக்கா தனது தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் கியூப வங்கியை சேர்த்துள்ளது.
பாங்கோ ஃபைனான்சியோ இன்டர்நேஷனல் (Banco Financio International) வங்கியே சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கியூப வங்கி அந்நாட்டு இராணுவத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்றும் அதன் இலாபங்கள் வெனிசுலாவில் நாட்டின் குறுக்கீட்டிற்கு நிதியளிக்க உதவுகின்றன என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகார எல்லைக்கு உட்பட்ட எவரும் பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.