வத்திக்கான் சென். பீற்றர்ஸ் பேராலயத்தில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
84 வயதை எட்டியுள்ள போப் பிரான்சிஸ், கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் நேற்று மாலை வத்திக்கான் சென். பீற்றர்ஸ் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையிலும், புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று மதியம் அவர் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில், மெய்நிகர் முறையில், புத்தாண்டு ஆசி வழங்கியுள்ளார்.