காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான, முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங், உடல்நலக் குறைவு காரணமாக தனது 86 ஆவது வயதில், டெல்லியில் காலமானார்.
சுயநினைவை இழந்ததால், பூட்டா சிங், கடந்த ஒக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இன்று காலை 5.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1986 ஆம் ஆண்டு தொடக்கம், 1989 வரை மத்திய உள்துறை அமைச்சராக பூட்டா சிங் பதவி வகித்த காலப்பகுதியிலேயே சிறிலங்காவில் இந்தியத் தலையீடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காலகட்டத்தில் சிறிலங்காவில் அவர் பல்வேறு பேச்சுக்களிலும் அவர் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.