பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமேற்குப் பாகிஸ்தானில் கரக் நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை அடிப்படை மதவாத கும்பல் ஒன்று இடித்து தீ வைத்தது. இதனால் கோவில் தரைமட்டமானது
இந்த சம்பவத்தைக் கண்டித்து கராச்சியில் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இந்துக்கள் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இந்து கோவிலை இடித்தமைக்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.