டெல்லியில் உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் 40 பேரும் டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், “டெல்லியில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.73 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருக்கும் என்று மேலும் தெரிவித்தார்.