அ.தி.மு.க. கூட்டணியில் 38 தொகுதிகளில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டுள்ள, பாரதீய ஜனதா கட்சி, அந்த தொகுதிகளில், போட்டியிடும் வேட்பாளர்களையும் தெரிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள பட்டியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, சேப்பாக்கம் தொகுதியில் குஷ்புவும், தி.நகர் தொகுதியில், எச்.ராஜாவும், கொளத்தூர் தொகுதியில் ஏ.என்.எஸ்.பிரசாத்தும், மயிலாப்பூர் தொகுதியில் கரு.நாகராஜனும், செங்கல்பட்டு தொகுதியில் கே.டி.ராகவனும், போட்டியிட வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணாகரம் தொகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகன் வித்யராணியும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையும், தஞ்சாவூர் தொகுதியில் கருப்பு முருகானந்தமும், நெல்லையில் – நயினார் நாகேந்திரனும், தூத்துக்குடியில் – சசிகலா புஷ்பாவையும் போட்டியில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணி இன்னமும் இறுதி செய்யப்பட்டு, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?, எந்தெந்த தொகுதிகள்? என்பது முடிவு செய்யப்படுவதற்கு முன்னரே, பாஜக வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல், அ.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.