‘எக்ஸ்’ என்ற புதிய தொற்று நோய் குறித்து, எபோலா வைரஸை கண்டறிந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வைராலஜி மருத்துவர் பீட்டர் பயட் (Peter Piot), எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘எக்ஸ்’ நோய் (Disease X) என்ற புதிய வைரஸ் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மழைக் காடுகளில் இருந்து பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் விரைவில் உலக நாடுகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தாக்கத்தினால் எதிர்காலத்தில் பலர் பலியாக வாய்ப்புள்ளதாகவும், மருத்துவர் பீட்டர் பயட் (Peter Piot), எச்சரித்துள்ளார்.
இது கொரோனா வைரசை விட பன்மடங்கு ஆற்றல் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எக்ஸ் என்பது எதிர்பாராததைக் குறிக்கும் எனவும், ‘எக்ஸ்’ நோய் என்பது இப்போது கற்பனையானது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.