இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகள் மற்றும் இஸ்ரேலில் ஏழு சிறுபான்மையினர் உட்பட குறைந்தது 27 பாலஸ்தீனியர்களை கொலை செய்துள்ளதாக மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இக் காலக் கட்டத்தில் கட்டுமான அனுமதி இல்லாதது என்ற போலிக்காரணத்தில் 729 பாலஸ்தீனிய கட்டிடங்களை இஸ்ரேல் இடித்தும் உள்ளது.
இஸ்ரேல் தனது கொள்கைகளால் 273 வீடுகள் இடிக்கப்பட்ட பின்னர் 519 சிறுபான்மையினர் உட்பட ஆயிரத்து ஆறு பேர் பாலஸ்தீனியர்களை இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
மேலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குறைந்தது 2 ஆயிரத்து 785 பாலஸ்தீனியர்களை தடுத்து வைத்திருப்பதாகவும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் குழு தகவல் வெளியிட்டுள்ளது.