இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டட திட்ட வடிவமைப்பின், அமுலாக்கத்தில் விதிமீறல்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டலாம். ஆனால் கட்டுமானத்தைத் தொடங்கக் கூடாது என கடந்த டிசம்பர் 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எனினும் திட்டமிட்டபடி கடந்த டிசம்பர் 10ஆம் திகதி நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.