புத்தாண்டு தினத்தன்று உலகிலேயே அதிகளவு குழந்தைகள் பிறந்த நாடு என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் நாள் இந்தியாவிலேயே அதிகளவு குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 1ஆம் நாள் உலகம் முழுவதும் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டின் முதல் குழந்தை பிஜியிலும், அன்றைய நாளில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளன.
இந்தியாவில் அதிகபட்சமாக 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன. அதையடுத்து, சீனாவில் , 35 ஆயிரத்து 615 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.