ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் நாள் வரை நீடிக்கப்படுவதாக, அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்த, ஜெர்மனி அரசு, நாடு தழுவிய முழு ஊரடங்கை ஜனவரி 10-ம் நாளுக்குப் பின்னரும் நீடிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஜனவரி 31-ம் நாள் வரை முழு ஊரடங்கை நீடித்துள்ளதாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.