இந்திய விமானப்படையின் மிக் போர் விமானம் ஒன்று நேற்றிரவு விழுந்து நொறுங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சுரத்கர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் மிக்–21 போர் விமானமே, விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு 8.15 மணியளவில், திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், இதையடுத்து, அந்த விமானம் தரையில் விழுந்து நொருங்கியதாகவும், கூறப்படுகிறது.
இந்த விபத்தின் போது, விமானி பாதுகாப்பாக வெளியேறியதால், உயிர் தப்பியுள்ளார்.