இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 7.7 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி நிலை குறித்த அறிக்கையை, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2020-21 நிதியாண்டில் இந்தியா கடந்த ஆண்டைவிட, 7.7 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2019-2020 நிதியாண்டில் 146 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21 நிதியாண்டில் 135 லட்சம் கோடியாக குறைய வாய்ப்புள்ளது என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.