இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுக்குள், உளவு நிறுவனம் ஒன்று ஊடுருவியுள்ளதாக, முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது தனக்கு கொடிய விஷம் கொடுக்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
செயற்கை துளை ராடர் கட்டமைப்பதில் நிபுணத்துவம் போன்ற மிகப்பெரிய இராணுவ மற்றும் வணிக முக்கியத்துவத்தின் முக்கியமான பங்களிப்பைக் கொண்ட ஒரு விஞ்ஞானியை நீக்குவதற்கான உளவுத் தாக்குல் இதன் நோக்கமாக இருக்கலாம் என்றும், தபன் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
தனது வாயை மூடுவதற்காக நூற்றுக்கணக்கான அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன என்றும், குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து பாதுகாப்பு அமைப்பினால் தான் காப்பாற்றப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான தகவல்களை அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.





