பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் (Covaxin) கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், ‘கோவாக்சின்’ (Covaxin) என்ற தடுப்பூசியை, உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசிக்கும் மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளது.
இந்தநிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் (Covaxin) கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
3ஆம் கட்ட பரிசோதனையில் 25 ஆயிரத்து 800 தன்னார்வலர்கள் பங்கேற்றதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.