கியூபெக்கில் நாளை தொடக்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இதனை மீறுவோர், 6 ஆயிரம் டொலர் அபராத தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாகாண அரசு, நாளை தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அறிவித்துள்ளது.
இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கின் போது, வேலைக்குச் செல்பவர்கள் தவிர ஏனையோர், வெளியில் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், இரவு 7.30 மணியுடன் மூடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊடரங்கு விதிமுறைகளை மீறினால், 6 ஆயிரம் டொலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கியூபெக் முதல்வர் பிராங்கோயிஸ் லீகோல்ட் (Francois Legault) அறிவித்துள்ளார்.