இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், எதிர்வரும்,11-ம் திகதி அனைத்து மாநில முதல்வர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா வைரஸை தடுக்கும், கோவிஷீல்ட் தடுப்பூசியையும், கோவேக்சின் தடுப்பூசியையும், அவசர கால பயன்பாட்டுக்கு,இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேநந்தி மோடி வரும் 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதன்போது, மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.