அரசு பணியில் இருந்து விலகிய பின்னர் அரசியலில் நுழையும் திட்டம் இல்லை என்று விருப்ப ஓய்வு பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
“நான் மக்களுக்கு சேவையாற்ற நினைக்கும் ரகத்தை சேர்ந்தவன்.
ஆயினும், கடந்த, ஏழு ஆண்டுகளாக, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புள்ள பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே, பதவியில் நீடித்தது போதும் என நினைத்து, விருப்ப ஓய்வுக்கு மனு செய்தேன்.
30 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றிய என்னை, தவறு செய்தவனை விடுவித்ததுபோல், விடுவித்துள்ளனர். அரசியலில் நுழையும் திட்டம் இல்லை எதுவும் இல்லை ஆனால், சமூக பணியாற்றவும், ஊழலுக்கு எதிராக பணியாற்றவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.