நாட்டில் கொரோனா தொற்று தடுப்பூசிகளை பயன்பாடு குறித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கோவக்ஸின் தடுப்பூசி மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் (Covshield) தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
தடுப்பூசிகளின் செயல்பாடு, விநியோகம் உள்ளிட்டவை தொடா்பாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஒத்திகை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.