மகாராஷ்டிரா மாநிலத்தில், பந்த்ரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குறைமாத குழந்தைகள் மற்றும், பிறக்கும் போதே குறைபாடு உள்ள குழந்தைகள் சிகிச்சை பெறும், சிறப்பு சிகிச்சை பிரிவிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று, தீயை அணைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தில் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி சிகிச்சை பெற்ற 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 7 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.