ட்ரம்ப்பிற்கு ஆதரவாக, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு, அவர்களின் வேலையைப் பறிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையுடன் நாடாளுமன்ற பகுதியில் காணப்பட்ட ஊழியர் ஒருவரை,, மேரிலாண்டில் உள்ள சந்தைப்படுத்தல் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
அதுபோன்று, டெக்சாசில் காப்புறுதி நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றிய ஒருவரும், கலவரத்தில் ஈடுபட்ட ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகளை பல்வேறு நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.