ஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது.
பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக பேச்சாளரின் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அந்த வாகனம் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக பேச்சாளர், உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.