அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும் புதிய குடியேற்ற சட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்த முதல் நாளில் இருந்தே, குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், டிரம்பின் குடியேற்ற கொள்கைகள் மிகவும் கொடூரமானவை எனக் கூறியதோடு நான் பதவிக்கு வந்ததும் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, தான் பதவியேற்றதும் உடனடியாக குடியேற்ற சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.