கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்ட் (covishield) தடுப்பூசி விநியோகம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் தடுப்பூசியையும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வரும் 16 ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.