கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு நடத்த -உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்கள் குழு, வரும் வியாழக்கிழமை சீனாவுக்கு செல்லவுள்ளது.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து சீனாவுக்குச் சென்று விசாரணை நடத்த சர்வதேச நிபுணர் குழுவினரை அனுமதிப்பதற்கு சீனா இழுத்தடித்து வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இதையடுத்து, நிபுணர்குழு வியாழக்கிழமை சீனா செல்ல உள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சீனா, உலக சுகாதார அமைப்பின் 10 விஞ்ஞானிகள், சீன விஞ்ஞானிகளுடன் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்ற கூறியுள்ளது.