மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவசர கால நிலையை மலேசிய மன்னர் பிரகடனம் செய்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை மலேசியாவில் அவசரகால நிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மலேசியாவில் இரண்டாவது முறையாக பொதுமுடக்க ஆணை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இராணுவப் புரட்சி அல்ல என்றும், நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாது என்றும் மலேசியப் பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.