சீனா உருவாக்கிய சினோவக் கொரோனா தடுப்பூசி 50.4 சதவீத செயல்திறனை மட்டுமே கொண்டது என்று தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அஸ்ட்ராசெனெகா, பைசர் மற்றும் மொடேனா நிறுவனங்களின் தடுப்பூசிகள் 90 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளன.
சீனாவின் சினோவக் பயொடெக் நிறுவனமும் சினோவக் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என சீன நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், பிரேசில் அவற்றை கொள்வனவு செய்திருந்தது.
சினோவக் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டத்தில், 50.4 சதவீத செயல்திறனை மட்டுமே கொண்டது என தெரியவந்துள்ளது.
சீனாவின் சினோவக் தடுப்பூசி, அங்கீகரிக்கக் கூடிய செயல்திறனை கூட கொண்டிருக்காமல் இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.