தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று மாலை நிறைவடைந்துள்ளது.
இன்று காலை 8 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இம்முறை 520 காளைகள் பங்கேற்றன.
காளைகளை பிடிக்க 430 இளைஞர்கள் போட்டியிட்டிருந்தனர்.
தலா 26 மாடுகளை பிடித்த, இரண்டு வீரர்கள் சிறந்த வீர்ர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் என 58 பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற தெரிவிக்கப்படுகிறது.