இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வி ற்கு இலக்கான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து வருகைத் தருபவர்கள் 14 நாட்கள் கட்டாயம் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு தற்போது இம்மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தவுடன் கட்டாயமாக சுய ஊதிய ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.