வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி உச்சநீதிமன்றம் அமைத்த குழு தன் முதல்கூட்டத்தைக் கூட்ட உள்ள நிலையில் அரசுடன் விவசாயிகள் நடத்தும் கடைசிப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்நிலையில் நம்பிக்கையின்றி இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளப் போவதாக விவசாயிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,