தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மதுரையில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தானும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை மதுரையில அரசு ராஜாஜி மருத்துவமனையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அம்மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுபவரும், மருத்துவர்கள் சங்க மாநில தலைவருமான வைத்தியர் செந்தில் முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் முதல் நாளில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளது. 6 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசியும், 160 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்படுகிறது.





