இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பித்து வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10.30க்கு காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளதாகவும், இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தலைசாய்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் இந்த பணி நாட்டின் வலிமையை காட்டுகிறது எனத்தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்த கோவக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கியது.





