80வீதமான இந்தியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விரும்புகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாளை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், தடுப்பூசிகள் குறித்து கட்டுக்கதைகள் பரப்பப்படுவதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய தடுப்பூசிகள் வெளிநாட்டு தடுப்பூசிகளை விட செயல்திறன் குறைந்தவை என்றும், மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும், பக்கவிளைவுகளை உண்டாக்கும், உருமாறிய வைரசுக்கு இந்திய தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது என்றும், கட்டுக்கதைகள் பரபரப்படுகின்றன.
தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தனியார் நிறுவனம் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் எடுத்த கருத்துக்கணிப்பு தகவல்களை பகிர்ந்துள்ளது.
அதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 80 வீதமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
இது இந்திய விஞ்ஞானிகள் மீதான நம்பிக்கை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.