ஆல்பேர்ட்டாவில் புதிய மீளச் செலுத்தல் ஊழிய முகாமை முறைமையை அறிமுகப்படுத்திய நிலையில் உடனடியாக ஐயாயிரம் ஊழியர்கள் வரையில் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மைய காலத்தில் பல அரச ஊழியர்கள் குறைந்த வருமானம் பெற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் பதிவாகியுள்ளது.
கனடிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திபிரிவினுடைய புலனாய்வு அறிக்கையிடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆல்பேர்ட்டாவில் அரச ஊழியர்களின் கடன்களை மீளச்செலுத்தல் உட்பட நெருக்கடியான நிலைமைகளில் வழங்கப்பட்ட நிதியுதவிகளை மீள வசூலிக்கும் முகமாக புதிய மீளச் செலுத்தல் ஊழிய முகாமை முறையொன்று அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாக அரச ஊழியர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.