சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுகத்தை தமதாக்கிக் கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது
அதானி குழுமத்திற்குச் சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என, துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடி தலைமையிலான கார்ப்பரேட் அரசும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மோடியின் பொம்மலாட்ட அரசும் கூட்டுசேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன.
இதன்படி, சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும் வகையில், வரும் ஜனவரி 22ஆம் திகதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.