உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.
தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு வெளியிட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ”இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, ரஷ்யா, சீனா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 179 நாடுகளில், அமெரிக்கா, ஜேர்மனி, சவுதி அரேபியா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.