இந்தியாவின் குடியரசு தினத்தன்று ஒரு இலட்சம் உழவு இயந்திரங்களில் பேரணி நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் விவசாயிகள் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், வரும் 26ம் திகதி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் உழவு இயந்திர பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தப் பேரணியில் சுமார் ஒரு இலட்சம் உழவு இயந்திரங்களில் விவசாயிகள் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்த இயந்திரங்களில் விவசாயிகள் கிளம்பியுள்ளனர்.