நைஜீரியாவின் போர்னோ (Borno) மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கி, கைப்பற்றியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கப்பட்ட இந்த தாக்குதல், இரண்டு நாட்கள் நீடித்ததாகவும், இறுதியில் இராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த மோதலில் அரசுப்படையினர் மற்றும் பயங்கரவாதிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியிட்டப்பட்டவில்லை.
தந்திரோபாயமாகவே தமது படையினர் பின்வாங்கினர் என்றும், பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ தளத்தை மீட்கும் முயற்சியில் நைஜீரிய படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்தும் அந்தப் பகுதிளில் மோதல்கள் நீடித்து வருகின்றன.