அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
வரும் 20-ந் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக தனது குழுவுடன் ஜோ பைடன் முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன்,
“100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமா என்கிற சந்தேகம் பலரிடமும் உள்ளது.
ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன் எங்களால் அதை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.