குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், இராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதன்முறையாக இந்த ஆண்டு ரஃபேல் போர் விமானங்கள் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் இந்திரானில் நந்தி தெரிவித்துள்ளார்.